Breaking News

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ₹5000 வழங்கப்படும் புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ₹5000 

விவசாய நிலம் ஹெக்டர் ஒன்றுக்கு ₹30,000 

வெள்ளத்தில் உயிரிழந்த ஒரு மாட்டுக்கு ₹40,000, 

இளம் கன்றுக்குட்டிக்கு ₹30,000

பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ₹20,000 

வீடுகளுக்கு ₹10,000 வழங்கப்படும் என அறிவிப்பு



வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் கரையைக் கடக்கும் போது பெய்த கடுமையான மழையால் தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பெஞ்சல் புயலால் புதுச்சேரியில் பெய்த வரலாறு காணாத மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ₹5000 ,விவசாய நிலம் ஹெக்டர் ஒன்றுக்கு ₹30,000 ,வெள்ளத்தில் உயிரிழந்த ஒரு மாட்டுக்கு ₹40,000, , இளம் கன்றுக்குட்டிக்கு ₹30,000, பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ₹20,000 வீடுகளுக்கு ₹10,000 வழங்கப்படும்  என அறிவித்தார்.

Tags: புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback