தெலுங்கானாவில் ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவான திடீர் நிலநடுக்கம் ம்க்களை பீதிக்குள்ளாக்கிய நலநடுக்கம் வைரல் வீடியோ
தெலுங்கானாவில் ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவான திடீர் நிலநடுக்கம் வைரல் வீடியோ
தெலுங்கானாவின் முழுகு மாவட்டத்தில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவில் 40 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் ஐதராபாத்திலும் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி தெலுங்கானாவின் ஐதராபாத், ஹனுமகொண்டா, கம்மம், பத்ராத்ரி கொத்தகுடேம் உள்ளிட்ட இடங்களிலும், ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா, ஜக்கையாபேட்டை, திருவூரு, கம்பாலகுடேம் ஆகிய இடங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று காலை 7.27 மணிக்கு ஏற்பட்ட இந்த திடீர் நிலநடுக்கம், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் அல்லது பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை. ஆந்திராவிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1864212251324108952
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ