புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்குப் பின் பேருந்துக் கட்டணம் உயர்வு முழு விவரம்
புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்குப் பின் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி போக்குவரத்து துறை கூடுதல் செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி நகரப் பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாயில் இருந்து 7 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
ஏசி வசதியுடன் கூடிய பேருந்துகளில் குறைந்தபட்ச -கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.13 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
புதுச்சேரி ஏசி வசதியில்லாத பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ.13-ல் இருந்து ரூ.17ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி அறிவிப்பை போக்குவரத்து கூடுதல் செயலர் வெளியிட்டார்.
Tags: புதுச்சேரி செய்திகள்