Breaking News

சாலையில் கார் மீது தீடீரென கவிழ்ந்து விழுந்த கண்டெய்னர் லாரி 6 பேர் உடல் நசுங்கி பலி! அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

பெங்களூரில் சோகம் கார் மீது கவிழ்ந்து விழுந்த கண்டெய்னர் லாரி 6 பேர் உடல் நசுங்கி துடி துடித்து பலி!


கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து துமகூரு நெடுஞ்சாலையில், நெலமங்களா என்ற இடத்தில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி பள்ளி வாகனம் மற்றும் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது , அதன் பின் கண்டெய்னர் லாரி நிலைதடுமாறி, அந்த கார் மீது கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த 5 பேரும், அருகில் பைக்கில் நின்று கொண்டு இருந்த ஒருவரும் என மொத்தம் 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து நெலமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

=கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்தில் சிக்கிய கார் Volvo XC90 என்பது தெரிய வந்துள்ளது. லேட்டஸ்ட் மாடலான இந்த காரை, கடந்த அக்டோபர் மாதத்தில்தான் வாங்கியுள்ளனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1870755368755937639

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback