Breaking News

இன்று 7 மாவட்டங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும் - சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

7 மாவட்டங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

மழைக்கால நோய்கள் மற்றும் ஃபெங்கல் புயல் காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், 

ஃபெஞ்சல் புயல் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் டிசம்பர் 1ம் தேதி 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இந்த மருத்துவ முகாம்கள் இன்று டிசம்பர் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படும்.

இதில் சென்னையில் 200 மருத்துவ முகாம்களும் மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் தலா 50 மருத்துவ முகாம்கள் என மொத்தம் 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். 

இந்த மருத்துவ முகாம்கள் தேவைக்கேற்ப எண்ணிக்கை அதிகரிக்கவும் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இன்று நடைபெறும் மருத்துவ முகாம்களில் காய்ச்சல், சளி பரிசோதனை, இரத்த கொதிப்பு, நீரிழிவு நோய்க்கான பரிசோதனை போன்ற அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.காய்ச்சல், சளி மருந்துகள், ரத்த கொதிப்பு, நீரிழிவு நோய்க்கான மருந்துகள், உப்பு – சர்க்கரை (ORS) கரைசல், நிலவேம்பு குடிநீர், சேற்றுப்புண் மருந்து போன்ற அத்தியாவசிய மருந்துகள் தேவைக்கு அதிகமாக கையிருப்பில் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.


மழைக்கால நோய்கள்... இன்று சென்னை உட்பட 7 மாவட்டங்களில் இலவச மருத்துவ முகாம்... அமைச்சர் தகவல்! 20m மழைக்கால நோய்கள் மற்றும் ஃபெங்கல் புயல் காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில், இன்று காலை 9 மணி முதல் கனமழை பெய்த சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். கடந்த இரு தினங்களாக பெய்து வந்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. அந்த பகுதியில் இருந்த மக்கள் பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


மேலும் பல இடங்களில் வெள்ளம் தேங்கியிருப்பதால் மழைக்கால நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களிலும் சுமார் 500 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், "ஃபெஞ்சல் புயல் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் டிசம்பர் 1ம் தேதி 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இந்த மருத்துவ முகாம்கள் இன்று டிசம்பர் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படும்.


இதில் சென்னையில் 200 மருத்துவ முகாம்களும் மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் தலா 50 மருத்துவ முகாம்கள் என மொத்தம் 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இந்த மருத்துவ முகாம்கள் தேவைக்கேற்ப எண்ணிக்கை அதிகரிக்கவும் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் மருத்துவ முகாம்களில் காய்ச்சல், சளி பரிசோதனை, இரத்த கொதிப்பு, நீரிழிவு நோய்க்கான பரிசோதனை போன்ற அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி மருந்துகள், ரத்த கொதிப்பு, நீரிழிவு நோய்க்கான மருந்துகள், உப்பு சர்க்கரை (ORS) கரைசல், நிலவேம்பு குடிநீர், சேற்றுப்புண் மருந்து போன்ற அத்தியாவசிய மருந்துகள் தேவைக்கு அதிகமாக கையிருப்பில் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback