திருவண்ணாமலையில் வீடுகள் மீது மண் சரிந்து பாறைகள் விழுந்து விபத்து அதிர்ச்சி வீடியோ
அட்மின் மீடியா
0
திருவண்ணாமலையில் 3 வீடுகள் மீது மண் சரிந்து பாறைகள் விழுந்து விபத்து முழு விவரம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை உச்சியில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்தது.சற்றும் எதிர்பாராமல் வேகமாக உருண்டு வந்த பாறை, வ உ சி நகர் 11-வது தெருவில் வீடுகளின் மீது விழுந்தது. இதில் இரு வீடுகளில் இருந்த 7 பேர் சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்தில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் எஸ்பி சுதாகர் தீயணைப்புத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றார், மேலும் கனமழை மற்றும் இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார், மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நாளை காலை வந்ததும் மீட்பு பணிகள் தொடங்கும் திருவண்ணாமலை ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1863400454752977142
Tags: தமிழக செய்திகள்