திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து சிறுவன் உட்பட 7 பேர் பலி முழு விவரம்
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து குழந்தை உட்பட 7 பேர் பலி முழு விவரம்
திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து இதில் 3 வயது சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்
திண்டுக்கல் மாவட்டம் திருச்சி சாலையில் உள்ள பிரபல தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் இன்று இரவு சுமார் 9.45 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்ப்பட்டது இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இருப்பினும் ஒரு சிலரால் மருத்துவமனையை விட்டு வெளியேற முடியவில்லை. பல்வேறு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். தனியார் ஆம்புலன்ஸ் உட்பட 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றும் பணி நடைபெற்றது.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்