Breaking News

சாலையில் ஓரமாக தனியாக நடந்து சென்ற மூதாட்டியை துரத்தி துரத்தி குதறிய 7 தெரு நாய்கள் அதிர்ச்சி வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

சாலையில் ஓரமாக தனியாக நடந்து சென்ற மூதாட்டியை துரத்தி துரத்தி குதறிய 7 தெரு நாய்கள் அதிர்ச்சி வைரல் வீடியோ

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள குருத்வாராவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த 65 வயது பெண் ஒருவரை தெருநாய்கள் கூட்டம் தாக்கின. இந்த தாக்குதலால் அவரது உடல் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது

அந்த பெண் குருத்வாராவில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது, ​​சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது சுமார் 7 நாய்கள் வெறி கொண்டு அந்த மூதாட்டியை துரத்தி துரத்தி கடித்தது  இதனால் அந்த பெண்ணுக்கு 25 இடங்களில் கடி மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது,

சுமார் 1 நிமிடங்களாக அவரை நாய்கள் கடித்து கொண்டு இருந்தது அந்த குடியிருப்பு வாசிகளுக்கு தெரியவில்லை , அதன்பின்பு அலறல் சத்தம் கேட்டு வந்த சிலர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகின்றது.

மேலும் சிலர் இந்த சம்பவம் ஆக்ராவில் நடந்தது என செய்தி வெளியிட்டுள்ளார்கள் ஆனால் இந்த சம்பவம் ஆக்ராவில் நடக்கவில்லை பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடந்தது என ஆக்ரா போலீசார் தெரிவித்துள்ளனர்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1871760654111293643

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback