வங்ககடலில் 7ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வங்ககடலில் 7ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புதெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் வரும் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மேற்கு - வடமேற்கு திசையில் நகரக் கூடும். 12ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் தமிழ்நாடு - இலங்கை கடலோர பகுதிகளை அடையக் கூடும் என கணிப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
ஆகவே 05-12-2024 மற்றும் 06-12-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
07-12-2024 முதல் 10-12-2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11-12-2024: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்