பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் தேர்ச்சி முறை ரத்து மத்திய அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து மத்திய அரசு அறிவிப்பு
மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி என்ற கொள்கையை ரத்து செய்துள்ளதாக மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய கல்வித்துறைச் செயலாளர் சஞ்சய் குமார் தெரிவிக்கையில்
8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயம் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்ற விதிமுறையை ரத்து செய்து கடந்த 2019-ல் மத்திய அரசு நிறைவேற்றிய சட்ட திருத்தம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
மேலும் 5 மற்றும் 8-ம் வகுப்பு இறுதியாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மறு தேர்வு எழுத 2 மாதங்களுக்குள் வாய்ப்பு தர வேண்டும். அதிலும் தேர்ச்சி அடையாத மாணவர்களை, அதே வகுப்பில் மீண்டும் தொடர வைக்கலாம் எனவும் இருப்பினும், இதில் மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்