Breaking News

தமிழகம் முழுவதும் 8997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

புரட்சி தலைவர் எம்ஜிஆர் – சத்துணவு உணவு திட்டம்1982 ஆம் ஆண்டில் சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தல், பள்ளிகளில் மாணவர் வருகையை தக்க வைத்தல், , அதே நேரத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்தல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். 

 

பசி அல்லது நோய்வாய்ப்பட்ட குழந்தையால் முழுமையாக ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்த முடியாது. இதனை கருத்தில் கொண்டு, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறப்புப் பயிற்சி மையங்கள், மதராசாக்கள் மற்றும் சர்வ சிக்ஷா அபியான் கீழ் செயல்படும் மக்தாப்களில் பத்தாம் வகுப்பு வரையிலான தொடக்க மற்றும் உயர்நிலை வகுப்புகளில் பயிலும் குழந்தைகளுக்கு சூடான சமைத்த மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

                              

தமிழ்நாடு முழுக்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு இலவசமாகச் சத்துணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

சத்துணவு திட்டத்தில் 8997 காலி பணியிடங்கள்  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் 8,997 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பிட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

மாதம் ரூ.3000 தொகுப்பூதியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பவும் 12 மாதங்கள் திருப்திகரமாக பணியினை முடிக்கும் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் கல்வித் தகுதியாக 10 ம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback