சென்னையில் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் பலாத்காரம் தோழி உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு நடந்தது என்ன முழு விவரம்
சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியில் வசித்து வரும் 21 வயதுடைய இளம்பெண் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் ஆங்கில இலக்கியம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய தந்தை சரக்கு வாகன டிரைவர் ஆவார். இவரது தாயார் கடந்த 2022-ம் ஆண்டு இறந்துவிட்டார்.இவர் 40% மனநல பாதிப்பு கொண்டவர் ஆவார். இதனால் தினம் கல்லூரிக்கு ஆட்டோவில் சென்று வந்துள்ளார்.
இவருக்கு சமீபத்தில் ஸ்னாப்ஷாட் எனப்படும் சோஷியல் மீடியா மூலம் சிலர் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர். இவர்களுடன் தொடர்ந்து பேசி வந்த இளம்பெண்ணிடம், சில நாட்கள் கழித்து நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனை நம்பிச் சென்ற மாணவி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவர்கள் என்னுடன் கல்லூரியில் பயின்று வரும் தோழியின் நண்பர்கள். சிலர் தன்னிடம் பேசிப்பழகி விடுதிக்கு அழைத்துச்சென்று பலாத்காரம் செய்தனர். இந்த செயல் ஓராண்டாக தொடருகிறது என தெரிவித்துள்ளார். மாணவியின் தோழி உட்பட 9 பேரின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். வழக்கில் சிக்கியவர்கள் கைதான பின்னர், இந்த விவகாரத்தில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.
சென்னை அயனாவரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மன வளர்ச்சி குன்றிய சிறுமி 17 பேர் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை போன்று இந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags: தமிழக செய்திகள்