தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் கைது முழு விவரம் allu arjun arrest
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் கைது முழு விவரம் allu arjun arrest
புஷ்பா 2 படம் பார்க்க அல்லு அர்ஜுன் சென்றதால் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான வழக்கில் ஹைதராபாத்தில் கைது
Film Pushpa 2 actor Allu Arjun arrested, arrested in Hyderabad stampede case, Hyderabad Police took Allu into custody, after the death of a youth in the stampede
புஷ்பா 2 திரைப்படம் பார்க்கச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார்.
இந்தப் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா எனும் தியேட்டருக்கு வந்தார்.எந்தவித முன்னறிவிப்புமின்றி வந்த அல்லு அர்ஜூனைக் காண கூட்டம் அலைமோதியது. இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, ரேவதி என்கிற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து. அத்தியேட்டரின் உரிமையாளர், மேனேஜர், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அது மட்டுமல்லாமல் அல்லு அர்ஜுன் மீதும் போலீசார்வழக்கு பதிவு செய்தனர்.இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அல்லு அர்ஜூன் அறிவித்தார்.
மேலும், படக்குழுவினர் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு உதவுவார்கள் என்று அறிவித்தார். அதோடு, தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் நடிகர் அல்லு அர்ஜூன் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் இன்று நடிகர் அல்லு அர்ஜூனை போலீசார் கைது செய்தனர்.
Tags: இந்திய செய்திகள்