Breaking News

வங்கதேசத்தில் காளை மாடுகள் அடித்துக் கொல்லப்படும் வீடியோ உண்மை என்ன முழு விவரம் bangladesh cow brutally beaten video

அட்மின் மீடியா
0

Viral Video Showing Bull Being Beaten To Death Is From Punjab, Not ISKCON’s Farm In Bangladesh As Claimed


பரவும் வீடியோ:-

பங்களாதேஷில் உள்ள இஸ்கானின் பண்ணையில் காளை மாடுகள் அடித்துக் கொல்லப்படும் வீடியோ என ஓரு வீடியோ பலராலும் ஷேர் செய்யப்படுகின்றது

அந்த வீடியோவில் ஒரு காளை மாட்டை 4 பேர் கட்டையால் கொடூரமாக அடித்து அதனை கொல்கின்றார்கள் ,இந்த வீடியோவை பலரும் வங்கதேசத்தில் நடந்தது என பரப்புகின்றார்கள்

உண்மை என்ன:-

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ வங்கதேசத்தில் நடந்தது கிடையாது

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ  இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் உள்ள  ஜலந்தரில் உள்ள ஓரு மாட்டு பண்ணையில் நடந்தது ஆகும்

பலரூம் ஷேர் செய்யும் அந்த வீடியோவை நவம்பர் 19, 2024 அன்று 'ஜர்னலிஸ்ட் பைசல்' என்பவர் தனது டிவிட்டர் தளத்தில் பதிட்டுள்ளார், அதில் Brutal beating of the voiceless...recognize the cruel faces and get them punished...கு மாடுகளை தாக்கிய கொடூரமான முகங்களை அடையாளம் கண்டு தண்டனை பெற்று கொடுங்கள் என பதிவிட்டு இருந்தார். மேலும் அந்த சம்பவம் எங்கு நடந்தது எப்போது நடந்தது என்று அதில் அவர் குறிப்பிடப்படவில்லை.

அவரின் அந்த பதிவிற்க்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டா PETA India இந்த  பதிலளித்தது, 

அதில் An FIR has already been registered by the Sadar police station under Section 325 of the Indian Penal Code (BNS) and Section 11 of the Prevention of Cruelty to Animals (PCA) Act. We are talking to the Deputy Commissioner of Police (DCP) to include provisions of the Prohibition of Cow Slaughter Act, 1955 in the FIR 

இந்திய தண்டனைச் சட்டம் (பிஎன்எஸ்) பிரிவு 325 மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் (பிசிஏ) பிரிவு 11ன் கீழ் சதர் காவல் நிலையத்தில் ஏற்கனவே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1955-ம் ஆண்டு பசுவதைத் தடைச் சட்டத்தின் விதிகளை எப்ஐஆரில் சேர்க்க காவல்துறை துணை ஆணையரிடம் (டிசிபி) பேசி வருகிறோம். என அதில் குறிப்பிட்டு இருந்தது.

மேலும் Animal Protection Foundation விலங்கு பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர்கள் தங்கள் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்கள்.

மேலும் அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில்;-

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஜம்ஷர் பால் பண்ணை வளாகத்தில் நான்கு பேர் சேர்ந்து ஒரு காளை அடித்துக் கொன்றது வீடியோவில் காட்டப்பட்டுள்ளது என்றும் நமது  விலங்கு பாதுகாப்பு அறக்கட்டளை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர் 

மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் இந்துக்கள். இதில் வகுப்புவாத கோணம் இல்லை. இதுகுறித்து போலீஸ் டி.எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளோம். குற்றவாளிகளை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த வழக்கின் எப்ஐஆர் எங்கள் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது,'' என்று அதில் தெரிவித்துள்ளார்கள்.

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-:-

https://x.com/faisalbaig3102/status/1858716768484651467

அட்மின் மீடியா ஆதாரம் இங்கு கிளிக் செய்யவும்:-:-

https://x.com/PetaIndia/status/1859084870581912038

அட்மின் மீடியா ஆதாரம் இங்கு கிளிக் செய்யவும்:-:-

https://www.facebook.com/share/v/17sKPqYgU9/

அட்மின் மீடியா ஆதாரம் இங்கு கிளிக் செய்யவும்:-:-

https://www.facebook.com/share/p/18Pt4UVuq6/

அட்மின் மீடியா ஆதாரம் இங்கு கிளிக் செய்யவும்:-:-

https://www.facebook.com/share/p/15KDNcAAFr/.

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback