Breaking News

ஒரு வாரமாக ஆட்டம் காட்டிய பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது ஆனாலும் மழை தொடரும் வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0
ஒரு வாரமாக ஆட்டம் காட்டிய பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது ஆனாலும் மழை தொடரும் வானிலை ஆய்வு மையம்




மாலை 5.30 மணியளவில் கரையைத் தொட்ட ஃபெஞ்சல் புயல், புதுவை அருகே முழுமையாக கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்ற நிலையில் இந்த புயலுக்கு 'ஃபெங்கல்' எனவும் பெயர் சூட்டப்பட்டது.

இந்த ஃபெங்கல் புயல் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நேற்று மாலைக்குள் சென்னை-புதுச்சேரிக்கு இடையே, மாமல்லபுரம்-புதுச்சேரி இடைப்பட்ட பகுதியை மையமாகக் கொண்டு கரையை கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதேபோல் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையை கடந்தது.முதலில் முனைப்பகுதியும், அடுத்து மையப்பகுதியான கண் பகுதியும், இறுதியில் வால் பகுதியும் கடந்தது. இரவு 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் கரையக் கடந்தது. அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஃபெஞ்சல் புயல் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கி இரவு 10.30 முதல் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையை கடந்துள்ளது. இது தொடர்ந்து புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. கடந்த 3 மணி நேரத்தில் பெரும்பாலும் நகராமல் உள்ளது. தற்போதைய சூழலில் ஃபெஞ்சல் புயல் மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, அடுத்து வரும் 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையும். 

காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல்  மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை நின்றாலும், தற்போது காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு கருதி மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback