Breaking News

கோவையில் தடையை மீறி பேரணியாக சென்ற அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கைது

அட்மின் மீடியா
0

உடல்நலக் குறைவால் உயிரிழந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்ததை கண்டித்து பேரணி நடத்திய அண்ணாமலை மற்றும் பாஜகவினர் கைது



கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாட்ஷா இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு எதிராக இந்து இயக்க கூட்டமைப்பு சார்பில் கருப்பு தின பேரணி நடைபெற்றது. 

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே தமிழக அரசை கண்டித்து நடைபெற்ற பேரணியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் ஈடுபட்டனர். அவர்களை சித்தாபுதூர் பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.இந்நிலையில் தடையை மீறி பேரணியாக சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback