Breaking News

மெரினா சாலையில் வெள்ளம் என்று பரவும் வீடியோ உண்மை என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

மெரினா சாலையில் வெள்ளம் என்று பரவும் வீடியோ உண்மை என்ன முழு விவரம்

பரவும் வீடியோ:-

நவம்பர் மழை வெள்ளத்தில் மெரினா கடற்கரை சாலை மூழ்கியதாகக் கூறி காணொளி ஒன்று வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.  

சமூக உண்மை என்ன? 

இது முற்றிலும் பொய்யான தகவல். இக்காணொளி கடந்த செப்டம்பர் மாதம் சவூதி அரேபியா நாட்டில் உள்ள ஜெட்டா நகரில் வெள்ளத்தின்போது எடுக்கப்பட்டது.

பெஞ்சல் புயலின் காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், சில இடங்களில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மழை நீர்  வடிந்து இயல்பு நிலை திரும்பியது. 

இந்நிலையில், சென்னை மழை வெள்ளம் எனக் கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது அதில் மகிழ்ச்சி வெள்ளத்தில் சென்னை மக்கள்!? சென்னையில் மழை பெய்த சுவடே இல்லை என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார்.. ஆனால் நிலையை பாருங்கள்" எனக் குறிப்பிட்டு இந்த வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டது. 

உண்மை என்ன? 

அந்த வீடியோ பொய்யானது என  தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் சவூதி அரேபியா நாட்டில் பயங்கர மழையால் வெள்ளம் ஏற்பட்டது. ஜெட்டா நகரில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது சாலை முழுவதும் மழைநீர் சூழ்ந்த நிலையில் வாகனத்தில் செல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோவை, சென்னை எனக் கூறி பொயாக சிலர் ஷேர் செய்து வருகின்றார்கள் என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு ஆதாரம்

https://x.com/tn_factcheck/status/1862903437916053901

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback