Breaking News

பைக் டாக்ஸிகள் இயங்கலாம் ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது - அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்ட விவகாரம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்



பைக் டாக்ஸி விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு பைக்குகளை வாடகை ரீதியாக இந்தியா முழுவதும் பயன்படுத்த அனுமதித்துள்ளது, 

தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகள் இயங்கலாம், ஆனால் விதிமீறலில் ஈடுபடக் கூடாது பைக் டாக்ஸிக்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறோம் பைக் டாக்ஸி பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது அதே சமயம் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாகவும் கருத்து நிலவுகிறது" உரிய உரிமம், மூன்றாம் நபர் காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களுடன்தான் இயக்க வேண்டும், பைக் டாக்ஸிகள் விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே தணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளோம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback