ஊத்தங்கரை சாலையில் அடித்து செல்லபட்ட வாகனங்கள் திக் திக் வைரல் வீடியோ
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே கடுமையான வெள்ளப்பெருக்கால் வாணியம்பாடி சாலையில் ஏரி நிரம்பி சாலையில் இருந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன ஏரியில் நீர் நிரம்பியதால் அரூர் முதல் ஊத்தங்கரை செல்லும் சாலை போக்குவரத்து துண்டிப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த 24 மணி நேரத்தில் 50 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. ஊத்தங்கரையில் நீர் நிலைகள் நிரம்பி சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே வாணியம்பாடி சாலையில் ஏரி நிரம்பி சாலையில் இருந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.
கன மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர் சாலைகளில் பாய்ந்து ஓடி வருகிறது. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாணியம்பாடி சாலையில் ஏரி நிரம்பி சாலையில் இருந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பேருந்துகள், லாரி, கார்கள் ஆகியவை வெள்ள நீரில் கவிழ்ந்து கிடக்கின்றன.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1863427913741398235
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ