Breaking News

தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரை குவைத்திலிருந்து வந்து கொலை செய்துவிட்டு மீண்டும் குவைத் சென்ற தந்தை!

அட்மின் மீடியா
0

குவைத்திலிருந்து வந்து கொலை செய்துவிட்டு மீண்டும் குவைத் சென்ற தந்தை!

மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரை துபாயிலிருந்து வந்து கொலை செய்த தந்தை! 



பெண் பிள்ளைகள் மீது கை வைத்தால் அவரது தந்தை, அண்ணன், தம்பியால் இந்த நிலை வரும் என்று பயம் வேண்டும் கொலைக்கு பின் வீடியோ வெளியிட்ட தந்தை

ஆந்திராவின் அன்னமையா மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவர் தனது மனைவி சந்திரகலாவுடன் குவைத்தில் வேலை செய்து வரும் நிலையில், தனது 12 வயது மகளை உறவினர் வீட்டில் தங்கி வைத்துள்ளார், இந்நிலையில், கடந்த வாரம் வீட்டில் சிறுமி தூங்கிக் கொண்டு இருந்தபோது அவரது உறவினர் ஆஞ்சநேயுலு என்ற 59 வயது மாற்றுத்திறனாளி தனது பேத்தி வயதான அந்த சிறுமியின் வாயில் துணியை வைத்து அழுத்தி உள்ளார்

தொடர்ந்து அவர் சிறுமியை பாலியியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் வந்துள்ளனர் அந்த சிறுமி நடந்த விவரங்களை குவைத்தில் உள்ள தனது தாய் சந்திரகலாவுக்கு போன் செய்து கூறிய உடன் இந்தியாவுக்கு திரும்பிய அவர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

ஆஞ்சநேயலுவை காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவரை கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர் இந்நிலையில், மீண்டும் குவைத்திற்கு திரும்பிய சந்திரகலா நடந்த விவரத்தை கணவர் பிரசாத் கூறியுள்ளார்

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரசாத் 4 நாட்கள் விடுமுறையில் யாருக்கும் சொல்லாமல் இந்தியா வந்து, இரவு சென்று தூங்கிக் கொண்டுருந்த ஆஞ்சநேயலுவை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்துவிட்டு யாருக்கும் தெரியாமல் மீண்டும் குவைத் சென்று உள்ளார்

ஆனால் ஆஞ்சநேயலு எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று தெரிய வேண்டும் என்பதனால் குவைத்தில் இருந்து பிரசாத் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்

அந்த வீடியோவில்:-

பெண் பிள்ளைகள் மீது கை வைத்தால் அவரது தந்தையோ, அண்ணனோ, தம்பியால் இதுபோன்ற நிலை ஏற்படும் என்ற பயம் தவறு செய்பவர்களுக்கு இருக்க வேண்டும் எனக்கூறி நடந்த விவரங்களுடன் விளக்கமளித்துள்ள பிரசாத், தவறு செய்தேன் அதற்குண்டான தண்டனை சட்டப்படியை நான் ஏற்கத் தயாராக உள்ளேன் எனவும் கூறியுள்ளார்.அதற்காக விரைவில் இந்தியா வந்து போலீசில் சரண் அடைவதாகவும், இந்த வீடியோவை முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அனைத்து ஊடகத்தினரும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என பிரசாத் கேட்டுள்ளார்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback