Breaking News

ஆதார் அட்டை இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு..!! உங்கள் மொபைல் போனில் நீங்களே புதுப்பிப்பது எப்படி முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஆதார் அட்டை இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு..!! UIDAI அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ஆதார் அட்டை என்பது ஒருவர் இந்தியர் என்பதை நிரூபிப்பதற்கான 14 இலக்க எண்களை கொண்ட தனித்துவ அடையாள ஆவணமாகும். மேலும், இந்த ஆதார் கார்டை 10 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிப்பது என்பது கட்டாயமாகும். 

இந்நிலையில், இது தொடர்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ( UIDAI) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது, மக்கள் தங்கள் ஆதாரில் உள்ள பெயர், முகவரி போன்றவற்றை எவ்வித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக மாற்றி கொள்வதற்கு இன்று (14.12.2024 ) வரை அனுமதி அளித்து இருந்த நிலையில், மக்களின் நலன் கருதி தற்போது ஆதார் அட்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 14 தேதி வரை நீட்டித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ( UIDAI) அறிவித்துள்ளது.

ஆதார் அப்டேட் செய்வது எப்படி:-

https://myaadhaar.uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் செல்லவும். 

அடுத்து அதில் லாகின் என்பதை கிளிக் செய்து உள் நுழையுங்கள்

அதன்பின்பு உங்கள் தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்து கீழ் உள்ள கேப்சாவை பதிவிட்டு உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபியை பதிவிடுங்கள்

அடுத்து வரும் பக்கத்தில் 'Document Update' என்பதை கிளிக் செய்யுங்கள்

அதில் உங்கள் ஆதார் விவரங்களை சரி பார்த்து கொள்ளுங்கள்

அடுத்து உங்கள் முகவரி மற்றும் அடையாள ஆவணங்களின் நகல்களை பதிவேற்றம் செய்து தங்கள் ஆதாரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஆதாரில் உள்ள முகவரி மாற்றம் செய்ய:-

Update your Address Online” என்ற வசதியை கிளிக் செய்யவும்.

உங்களிடம் சரியான முகவரிச் சான்று இருந்தால் “Proceed to Update Address” என்பதில் கிளிக் செய்யவும்.

அடுத்து உங்களது இருப்பிட முகவரியைப் பதிவு செய்து submit  கொடுத்து முகவரிச் சான்றுக்கான சரியான ஆவணத்தின் ஸ்கேன் காப்பியை அப்லோடு செய்து ”submit" கொடுக்க வேண்டும்.

உங்களது ஆதார் அப்டேட் கோரிக்கை ஏற்கப்பட்டு, அதற்கு ஒரு உறுதிப்படுத்தும் எண்ணும் வழங்கப்படும். இந்த எண்ணை வைத்து உங்களது ஆதார் அப்டேட் ஸ்டேட்டஸை நீங்கள் பார்க்கலாம்.

aadhar card update

aadhar card address change

aadhar card update status

aadhar card address change online

aadhaar address updateaadhar card address update

aadhar card correction

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்
 
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback