Breaking News

ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் நாள் பணியில் சேர செல்லும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர் முழு விவரம்

அட்மின் மீடியா
0

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான ஹர்ஷ் பர்தன், யுபிஎஸ்சி தேர்வில் வென்று ஐபிஎஸ் அதிகாரியாக பயிற்சியை முடித்து கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் முதன்முறையாக பதவி ஏற்க செல்லும் வழியில் கார் விபத்தில் பரிதாபமாக இறந்தார்.



மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷ்பர்தன் இவர் கர்நாடக கேடரில் கடந்த 2023-ம் ஆண்டு ஐபிஎஸ் முடித்துள்ளார். மைசூருவில் உள்ள கர்நாடக போலீஸ் அகாடமியில் தனது நான்கு வார பயிற்சியை முடித்த இவருக்கு ஹோலேநரசிபூரில் உதவிக் காவல் கண்காணிப்பாளராக போஸ்டிங் கிடைத்துள்ளது. 

இந்த நிலையில் நேற்று முதல் நாள் பணிக்காக காத்திருந்த அவர் நேற்று மாலை பணியில் சேர்வதற்காக போலீஸ் வாகனத்தில் செல்லும் போது ஹாசன் தாலுக்காவில் உள்ள கிட்டானே அருகே திடீரென டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. பலத்த காயம் அடைந்த ஹர்ஷ் பர்தனை அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


ஹர்ஷ் பர்தன் 2022-23 பேட்ச்சில் ஐபிஎஸ் முடித்துள்ளார். மேலும், ஹர்ஷ் பர்தன் யுபிஎஸ்சி தேர்வில் 153வது ரேங்க் பெற்று முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் கர்நாடகா காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback