தமிழக அரசின் திருக்குறள் போட்டி - தங்களது படைப்புகளை அனுப்புவது எப்படி முழு விவரம்
தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரியில் கடல் நடுவே 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில், திருக்குறள் போட்டி நடத்தப்படுகிறது.
அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவையொட்டி பல்வேறு திருக்குறள் போட்டிகளின் கீழ் தங்களது படைப்புக்களை அனுப்புவதற்கு 3 நாட்களே உள்ளன.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
6 வயது வரையிலானோருக்கு ஒரு அதிகாரம்
7 முதல் 10 வயது வரையிலானோருக்கு 3 அதிகாரம்
14 வயது வரையிலானோருக்கு 5 அதிகாரங்கள்
மூன்று பிரிவினரும் திருக்குறளை ஒப்புவித்து வீடியோவாக பதிவு செய்து அனுப்ப வேண்டும்.
கட்டுரை போட்டி
கற்றலின் மேன்மை குறித்து திருக்குறள்
அன்றாட வாழ்வில் திருக்குறளின் பங்கு
ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில், மூன்று பக்க அளவில் கட்டுரையை தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்.
ஓவியப் போட்டி
திருவள்ளுவர் ஓவியம்,
திருக்குறளில் ஏதேனும் ஒரு குறளை கருப்பொருளாக கொண்டு ஓவியம் தீட்டி புகைப்படம் எடுத்து அனுப்பவேண்டும்.
குறும்பட போட்டி
திருக்குறளை மையமாக கொண்டு, 3 நிமிட வீடியோ
கவிதை போட்டிக்கு 16 வரிக்குள் கவிதை,
செல்பி போட்டிக்கு, தங்கள் பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலை அல்லது திருக்குறள் எழுதப்பட்ட இடங்கள் முன்பு செல்பி எடுத்து அனுப்ப வேண்டும்.
கடைசி நாள்:-
போட்டியாளர்கள் தங்கள் படைப்புகளை, வரும், 18ம் தேதிக்குள், போட்டோ, வீடியோ, ஆடியோ, டாக்குமென்ட், பி.டி.எப்., வடிவில், tndiprmhkural@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பிவேக்கவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, இதே இ-மெயிலில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போட்டியில் வெற்றிபெறுவோருக்கு, பதக்கம் மற்றும் பாராட்டு சான்று வழங்கப்படும், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்