Breaking News

விக்ரவாண்டி பாலத்தில் வெள்ளம் ரயில்கள் ரத்து பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. விக்கிரவாண்டி- முண்டியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே பாலத்தில் அபாய அளவை தாண்டி தண்ணீர் செல்கிறது. 

பயணிகளின் பாதுகாப்பு கருதி, 5 தென் மாவட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

* வைகை எக்ஸ்பிரஸ் ரயில்,

* பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்,,

* காரைக்குடி - சென்னை, எழும்பூர் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்

* மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்,இ

* சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்,

* சென்னை- மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்

*சென்னை- திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ், 

*விழுப்புரம்- தாம்பரம் ரயில், 

* புதுச்சேரி- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்

ஆகிய அனைத்து ரயில்களும் விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் இடையிலான பாலம் துண்டிக்கப்பட்டதை அடுத்து ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

தஞ்சையில் இருந்து நேற்று எழும்பூர் புறப்பட்ட உழவன் எக்ஸ்பிரஸ் (16866 ) விழுப்புரம், காட்பாடி வழியாக எழும்பூர் செல்லும். மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் நிலையங்களில் ரயில் நிற்காது. 

மன்னார்குடியில் இருந்து நேற்று எழும்பூர் புறப்பட்ட ரயில் (16180), செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் நிறுத்தங்களில் நிற்காது. 

காரைக்காலில் இருந்து நேற்றிரவு தாம்பரம் புறப்பட்ட ரயில் (16176) விழுப்புரம், காட்பாடி வழியாக எழும்பூர் செல்லும். செங்கல்பட்டில் நிற்காது. 

செங்கோட்டையில் இருந்து நேற்று புறப்பட்ட சிலம்பு அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலும் (20682) விழுப்புரம், காட்பாடி வழியாக எழும்பூர் செல்லும். செங்கல்பட்டில் நிற்காது.

சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைப்பு 

விக்கிரவாண்டி - விழுப்புரம் இடையே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் ரயில் சேவை பாதிப்பு 

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் மற்றும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரத்து என ஏற்கனவே அறிவிப்பு

மதுரையில் இருந்து புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ் விழுப்புரத்திலேயே நிறுத்தி வைப்பு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback