Breaking News

நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூண்டோடு விலகல் சீமானுக்கு தொடரும் நெருக்கடி

அட்மின் மீடியா
0

நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூண்டோடு விலகல் சீமானுக்கு தொடரும் நெருக்கடி

நாம் தமிழர் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் 20க்கு மேற்பட்டோர்மற்றும் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியுள்ளார்கள் 



கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலர் சூரியா தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்

அவர் அளித்த பேட்டியில்:-

நாங்கள் நாம் தமிழர் கட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக குடும்பம், குழந்தைகளை விட்டு இரவு, பகல் பாராமல் கட்சிக்காக உழைத்தோம்.ஆனால், ஒருங்கிணைப்பாளர் சீமான், எங்களை எச்சில் என்று கூறுகிறார். அவர் வந்தால், அவருக்காக கொடி கம்பம் நடுவது, போஸ்டர் ஒட்டுவது, ரூம் போடுவது, சாப்பாடு என அனைத்தையும் நாங்கள் செய்வோம். ஆனால் எங்களை எச்சில் என்று கூறுகிறார். 

கட்சியில் இருக்கும் நீங்கள் யாரும் கேள்வி கேட்க கூடாது. என்னுடைய இஷ்டப்படி தான் செயல்படுவேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள்" என்று சீமான் பேசியதாக கூறி வருத்தம் தெரிவித்தார்

நாம் தமிழர் கட்சியில் அனுபவம் இல்லாதவர்களுக்கு பதவிகளை கொடுத்து, உழைத்தவர்களை புறக்கணித்து வருகின்றனர்.கட்சிக்காக பொருளாதரம் இழந்து, 10 ஆண்டுகளாக பாடுபட்ட எங்களை, சீமான் கேவலமாக பேசுகிறார். 

மாற்றுக்கட்சியில் இருந்து பலர் வந்துள்ளனர். அவர்கள் எல்லாம் எச்சில் இலையா?.பல ஆண்டுகளாக கட்சி பணி செய்து, பதவி உயர்வு கேட்டால், நீங்கள் இப்படி தான் இருக்க வேண்டும். நாங்கள் என்ன சொல்கிறோமோ, அதை மட்டும் தான் நீங்கள் செய்ய வேண்டும் என்கிறார். துளியும் மரியாதை இல்லாததால், கட்சியில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் விலகி விட்டோம்' இவ்வாறு அவர் கூறினார்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback