Breaking News

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் இளையராஜா வெளியேற்றப்பட்ட விவகாரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் விளக்கம்

அட்மின் மீடியா
0

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் இருந்து இசையமைப்பாளர் இளையராஜா வெளியேற்றப்பட்ட விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் விளக்கம்





விருதுநகர் மாவட்டம். ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயிலுக்கு 15.12.2024 அன்று இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் வருகை புரிந்ததன்பேரில், 16.12.2024 முதல் ஊடகங்களில் வரும் செய்தி குறித்து மேற்படித் திருக்கோயில் செயல் அலுவலர் பார்வை 2-ன் மூலம் பின்வருமாறு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 46(- ன் கீழ் உள்ள திருக்கோயில் ஆகும். 

இத்திருக்கோயிலானது முதல் நிலை செயல் அலுவலர் மற்றும் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட அறங்காவலர் குழு கூட்டுப் பொறுப்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. பார்வை காணும் குறிப்பில் 15.12.2024 அன்று இத்திருக்கோயிலுக்கு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ் ஜீயர் சுவாமிகள் மற்றும் இசையமைப்பாளர் திரு இளையராஜா அவர்கள் சுவாமிதரிசனத்திற்கு திருக்கோயிலுக்கு வருகை புரிந்தனர் என்றும்.

இத்திருக்கோயிலில் ரெங்கமன்னார். கருடாழ்வார். மூலவர் கருவறையிலும். கருவறையினை அடுத்த அர்த்த மண்டத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார். கருடாழ்வார் உற்சவரும் எழுந்தருளியுள்ளனர். எனவே, இத்திருக்கோயில் மரபு படியும். பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை திருக்கோயிலின் அர்ச்சகர். பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை என்றும் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். 

                        

15.12.2024 அன்று இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் உடன் வருகை புரிந்த போது அவருடன் இணைந்து அர்த்த மண்டப வாசல் படி ஏறிய போது உடன் இருந்த ஜீயர் சுவாமிகள் மற்றும் திருக்கோயில் மணியம் அர்த்த மண்டபம் முன்பு இருந்து சாமி தரிசனம் செய்யலாம் என கூறிய உடன் அவரும். ஒப்புக் கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்தார் என்றும். ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மட்டும் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தார் என்ற விவரம் பணியுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback