இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு முழு விவரம்
எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக புகழேந்தி அளித்த மனுவை விரைவாக விசாரித்து தீர்வு வழங்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
கடந்த மார்ச் மாதம் அண்ணா திமுக கட்சிக்கு சின்னம் ஒதுக்குவதற்கு முன்னதாக புகழேந்தி டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
தேர்தல் ஆணையத்தில் கொடுத்த பல மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில் அதை விசாரிக்காமல் முடிவெடுக்க கூடாது, விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த வழக்கை விசாரனை செய்த நீதிமன்றம் புதிதாக மனுவை பெற்று அதை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.
புதிய மனுவும் புகழேந்தியால் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பின்னர் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் மனுவின் மீது எடுக்கவில்லை. பின்னர் மூன்று முறை இதை நினைவு கூர்ந்து கடிதம் அனுப்பியும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை.விசாரணையும் செய்யவில்லை.
இதனை தொடர்ந்து டில்லியில் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் ஆணையர்கள் ஜானேஷ் குமார் , சுப்பீர் சிங் சாந்து ஆகியோர் மீது புகழேந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கு இன்று ( டிச.17) காலை நீதிபதி மனோஜ் ஜெயின் முன்பு விசாரணைக்கு வந்தது இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக புகழேந்தி அளித்த மனுவை விரைவாக விசாரித்து தீர்வு வழங்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
முன்னதாக திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும்வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் மனு அளித்தும் இதுவரையிலும் எந்த பதிலும் இல்லை. எனவே, இதுதொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கில் கடந்த டிச.4-ம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், "சூர்யமூர்த்தியின் மனு குறித்து தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும். பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும்” என உத்தரவிட்ட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags: அரசியல் செய்திகள்