அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு ஒத்திவைப்பு பள்ளிகல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு முழு விவரம்
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புக்கு மாணவர்களுக்கு டிசம்பர் 16ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும்,
6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் தேர்வு முடிந்து 1 முதல் 12ஆம் வகுப்பு வரை டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் ஜனவரி 2ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என் பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுக்கான பாடத்திட்டங்கள் நடத்திமுடிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் இரண்டாம் தேதியிலிருந்து செய்முறை தேர்வுகள் நடைபெற வேண்டிய காலம். மழையால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் மாவட்டங்களில் அரையாண்டு செய்முறை தேர்வு நடத்த முடியாத சூழல் இருந்தால் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் செய்முறை தேர்வு நடத்தி முடிக்க கூறியுள்ளோம்.
மாணவர்களின் நலன் தான் முக்கியம். எந்த எந்த மாவட்டத்தில் எந்த அளவில் பள்ளிகளில் மழை பாதிப்பு உள்ளது.? மின்சார பிரச்சனை உள்ளதா.? உள்ளே நுழையமுடியாத நிலை உள்ளதா என்பது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளது. அதன் படி தலைமை ஆசிரியர் மூலமாக தகவல் பெற்று தேர்வு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
டிசம்பர் 9ஆம் தேதிக்குள் வெள்ள பாதிப்பு சரி செய்யப்பட்டு விட்டது என பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாகவே உறுதி செய்யப்படும். இன்னமும் தண்ணீர் தேங்கியுள்ளது என தெரியவந்தால் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சரி செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு தேர்வோ அல்லது இரண்டு தேர்வோ நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் அதையும் சேர்த்து ஜனவரி மாதம் முதல் வாரம் நடத்தப்படும். இப்போது 9ஆம் தேதி நடைபெறுகின்ற அரையாண்டு தேர்வு தேதியில் மாற்றம் இல்லை. எங்கெல்லாம் நடத்த முடியாத சூழல் உள்ளதோ அங்கு மட்டும் ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்படும் என கூறினார்.
Tags: தமிழக செய்திகள்