ஆந்திராவில் இந்திய ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த நபர் பணம் திருப்பி கேட்டவர்களை அடித்து சித்திரவதை வீடியோ
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் இந்தியன் ஆர்மி காலிங் என்ற பெயரில் பயிற்சி மையம் நடத்தி, ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் பசவரமணா என்பவர், இந்தியன் ஆர்மி காலிங் என்ற பெயரில் பயிற்சி மையம் நடத்தி ராணுவம் உள்ளிட்ட முப்படைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆயிரக்கணக்கானவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்
மேலும் வேலை வாங்கி கொடுக்காததால் பணத்தைத் திருப்பி கேட்பவர்களை மிரட்டி தாக்குவதாகவும் இதேபோல் 2023-ல், இளைஞர் ஒருவரை கேபிள் வயரால் அவர் கொடூரமாக அடிப்பது போன்ற வீடியோ வைரல் ஆன நிலையில் அமைச்சர் நாரா லோகேஷ்உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்திய ராணுவ காலிங் (ஐஏசி) நிறுவனத்தின் நிறுவனர் மோசடி மற்றும் துஷ்பிரயோகம் செய்த அதிர்ச்சி சம்பவம் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்திய ராணுவ காலிங் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான பசவ ரமணா, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி வேலை தேடுபவர்களை உடல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்து சுரண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.வீடியோவில் இடம்பெற்றுள்ள மாணவர் அடையாளம் காணப்பட்டுள்ளார், மேலும் அவரது வாக்குமூலத்தைப் பெற ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வழக்கு தொடரப்படும் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1865691140781146540
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ