டெல்லியில் உணவகத்தில் ஏற்ப்பட்ட தீ விபத்து - உயிரை காப்பாற்றிகொள்ள மாடியில் இருந்து குதித்த மக்கள் வைரல் வீடியோ
டெல்லியில் உணவகத்தில் ஏற்ப்பட்ட தீ விபத்து - உயிரை காப்பாற்றிகொள்ள மாடியில் இருந்து குதித்த மக்கள் வைரல் வீடியோ
டெல்லியில் உள்ள ரஜோரி கார்டன் பகுதியில் உள்ள் ஜங்கிள் ஜம்போரி உணவகத்தில் ஏற்பட்ட தீவிபத்து உயிரை காப்பாற்றிக் கொள்ள அருகில் உள்ள கட்டிடங்களில் தாவிக் குதிக்கும் மக்கள்
மேற்கு டெல்லியின் ரஜோரி கார்டன் பகுதியில் உள்ள உணவகத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.பிற்பகல் 2.01 மணியளவில் டெல்லி, ரஜோரி கார்டன் ரயில் நிலையம் அருகே உள்ள ஜங்கிள் ஜம்போரி உணவகத்தில் இந்த தீவிபத்தானது ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினர் விரைந்துள்ளனர். மளமளவென பரவிய தீயை அணைக்கும் பணியில் 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன
.தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தங்கள் கடைக்கும் தீ பரவக் கூடும் என அருகில் இருக்கும் கடைக்காரர்கள் மத்தியிலும் பீதி ஏற்பட்டுள்ளது.
கடையை சுற்றி நின்று தீயை அணைக்கும் வீடியோவை டெல்லி தீயணைப்பு துறை பகிர்ந்துள்ளது. உணவக கட்டிடத்தில் சிக்கியவர்கள் மாடி வழியாக கீழே இறங்க முயற்சிப்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1866105234394866082
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ