திருநெல்வேலியில் பயங்கரம் நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை முழு விவரம்
அட்மின் மீடியா
0
திருநெல்வேலியில் பயங்கரம் நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை முழு விவரம்
திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் கீழ நத்தத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் மாயாண்டி (38 ) என்பவர் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது தீடீரென காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மாயாண்டியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அந்த 4 பேர் கொண்ட கும்பல் காரில் தப்பியோடினர்.
உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழிக்குப்பழியாக நடந்த கொலை என்று போலீசார் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்