Breaking News

நாடாளுமன்ற வளாகத்தில் மோதல் - காங்கிரஸ் , பாஜக பரஸ்பரம் குற்றசாட்டு நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

நாடாளுமன்ற வளாகத்தில் மோதல் - காங்கிரஸ் , பாஜக பரஸ்பரம் குற்றசாட்டு நடந்தது என்ன முழு விவரம்

 


டெல்லியில் உள்ள இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி, மற்றும் பாஜக எம்பிக்களுக்கு இடையே இன்று வாக்குவாதம் ஏற்பட்டது.அதில் கைகலப்ப்பும் ஆனதாக கூரப்படுகின்றது இதில் பாஜக எம்பி பிரதாப் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகிய 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாலுமன்றத்தில் அம்பேத்கர் குறித்த  பேச்சு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதனை தொடர்ந்து இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் நீல நிற உடைகளில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர். 

இந்தப் போராட்டத்துக்கு பாஜக கூட்டணி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.அப்போது நாடாளுமன்றத்துக்குள் செல்ல லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செல்லும் போது பாஜக எம்பிக்களோ அவரைத் தடுத்து தள்ளிவிட்டனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டு பின்னர் மோதலாக வெடித்தது

இதனிடையே நாடாளுமன்றத்துக்குள் தங்களை நுழையவிடாமல் தடுத்த பாஜக எம்பிக்கள் மீது லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இந்தியா கூட்டணி எம்பிக்கள் புகார் தெரிவித்தனர்.இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது

நாடாளுமன்ற வளாகத்திற்குள் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது எம்.பி ஒருவரை ராகுல் காந்தி தள்ளிவிட்ட போது அவர் தன் மீது விழுந்ததால், படிக்கட்டுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த தானும் விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி குற்றச்சாட்டு

பாஜக எம்பிக்கள் என்னை தள்ளிவிட்டதுடன் நாடாளுமன்றத்துக்குள் செல்ல விடாமல் எங்களை தடுத்து நிறுத்தினர் - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback