Breaking News

ஹெல்மெட் அணிவது தனிப்பட்ட விருப்பம் என முதலமைச்சர் உத்தரவிட்டதாக பரவும் செய்தி உண்மை என்ன

அட்மின் மீடியா
0

ஹெல்மெட் அணிவது தனிப்பட்ட விருப்பம் என முதலமைச்சர் உத்தரவிட்டதாக வதந்தி பரவுகிறது என உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டாம் என அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. 2018-ம் ஆண்டில் இருந்தே இந்த வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்தது.

 


பரவும் செய்தி:-

தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவது, அவர்களின் தனிப்பட்ட விருப்பம். உயிரின் மேல் விருப்பம் உள்ளவர்கள் அணிந்துகொள்ளட்டும்| ஹெல்மெட் அணியாதவர்களின் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் எனக் காவல் துறைக்கு முதல்வர் உத்தரவு. ஹெல்மெட்டுக்காக காவல்துறை அபராதம் கேட்டால். 8344606680 இந்த எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்' என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது. 

உண்மை என்ன

இது முற்றிலும் வதந்தியே. இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டாம் என்று அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. கடந்த 2018ம் ஆண்டிலிருந்தே இந்த வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது

Tags: FACT CHECK

Give Us Your Feedback