அயோத்தி போன்ற பிரச்னைகளை நாட்ட்டில் வேறு எங்கும் எழுப்பாதீர்கள்! ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு
அயோத்தி போன்ற பிரச்னைகளை நாட்ட்டில் வேறு எங்கும் எழுப்பாதீர்கள்! ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு
ராமர் கோயிலை விவகாரத்தை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு மற்ற பகுதிகளில் சர்ச்சைகளை ஏற்படுத்த வேண்டாம் என இந்து மத தலைவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அறிவுறுத்தியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் ‘இந்து சேவா மஹோத்சவ்’ விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மோகன் பகவத் உரையாற்றும் போது
இந்தியாவில் பல ஆண்டுகளாக சமூக நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.பயங்கரவாதம், ஆக்கிரமிப்பு, வலிமை மற்றும் பிறரின் கடவுள்களை அவமதிப்பது நம் கலாச்சாரம் அல்ல.
இங்கு பெரும்பான்மையோ சிறுபான்மையோ இல்லை, நாம் அனைவரும் ஒன்றுதான். அனைவரும் இந்த நாட்டில் தங்கள் வழிபாட்டு முறையை கடைப்பிடிக்க வேண்டும்.சில நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் சித்தாந்தங்கள் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்தது, அத்துடன் பயங்கரவாதமும் நாட்டில் நுழைந்தது”
வெவ்வேறு நம்பிக்கைகள் மற்றும் சித்தாந்தங்கள் எவ்வாறு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்கு இந்தியா ஒரு உதாரணமாக இருக்க வேண்டும்.
கடந்த கால தவறுகளில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொண்டு, உலக அரங்கில் நம் நாட்டை முன்மாதிரியாக மாற்ற பாடுபட வேண்டும்
தினமும் ஒரு புதிய வழக்கு (சர்ச்சை) எழுப்பப்படுகிறது. இதை எப்படி அனுமதிக்க முடியும்? சமீப காலமாக, கோவில்களைக் கண்டறிய மசூதிகளை கணக்கெடுக்க வேண்டும் என்ற பல கோரிக்கைகள் நீதிமன்றங்களை எட்டியுள்ளன.
நாட்டின் பல்வேறு இடங்களில் அயோத்தி போன்ற சர்ச்சைக் கருத்துகளை ஹிந்து அமைப்புத் தலைவர்கள் எழுப்புவது ஏற்றுக் கொள்ள முடியாது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு, இதுபோன்ற பிரச்சினைகளை எழுப்பி இந்துக்களின் தலைவர்களாக மாறிவிடலாம் என சிலர் நம்புகிறார்கள் ஆனால் இதை ஏற்க முடியாது.
நாம் ஒன்றாக வாழ முடியும் என்பதை இந்தியா காட்ட வேண்டும். காலங்காலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இந்த நல்லெண்ணத்தை உலகிற்கு வழங்க வேண்டுமானால், நாம் அதை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார் . இருப்பினும், பகவத் தனது விரிவுரையில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்