அண்ணா நகர் டவரில் கம்பிக்கு இடையில் சிக்கிக்கொண்ட குழந்தை சாதுர்யமாக மீட்ட பெற்றோர் வைரல் வீடியோ
அண்ணா நகர் டவரில் கம்பிக்கு இடையில் சிக்கிக்கொண்ட குழந்தை சாதுர்யமாக மீட்ட பெற்றோர் வைரல் வீடியோ
சென்னையில் உள்ள அண்ணா நகர் டவர் பூங்காவில் கம்பிகளுக்கிடையே குழந்தையின் தலை சிக்கிக்கொண்ட நிலையில் பெற்றோர்களே போராடி மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா நகர் டவர் பூங்காவில் இன்று மாலை 4 மணியளவில் பெற்றோர் ஒருவர் நான்கு வயது பெண் குழந்தையுடன் பூங்காவிற்கு வந்துள்ளனர்.
அப்போது அங்கே சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது பக்கவாட்டில் இருந்த இரும்பு கிரில் கம்பிகளுக்கு இடையே பெண் குழந்தையின் தலையானது சிக்கிக் கொண்டது. பெற்றோர்களே தொடர்ந்து முயற்சித்து குழந்தையை மீட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1868318290516554206
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ