சமூக வலைதளங்களில் பொய் செய்தி பரப்பியதாக அதிமுக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமார் மீது வழக்குப்பதிவு முழு விவரம்
சமூக வலைதளத்தில் பொய்யான தகவலை பரப்பிய புகாரில் அதிமுக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் மழைநீரால் மின்கசிவு ஏற்பட்டதாக பொய்யான தகவலை பரப்பியதாக புகார் கூறப்படுகிறது.
மியான்மரில் நடந்ததை சென்னை மெரினாவில் நடந்தது போல் சி.டி.ஆர். நிர்மல்குமார் பதிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் கண்டறிந்ததை அடுத்து, தான் பதிவிட்டதை நீக்கினார் நிர்மல்குமார்.சமூக வலைதளத்தில் பொய்யான தகவலை பரப்பிய புகாரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக நிர்வாகியான சிடிஆர் நிர்மல் குமார், தனது எக்ஸ் பக்கத்தில், ஒரு வீடியோவை பதிவிட்டு, "எங்கே பார்த்தாலும் மின் கசிவால் ஏற்படும் தீப்பொறி.. ஏன் இவ்வளவு அஜாக்கிரதை முதல்வரே?" எனக் கேள்வி எழுப்பி பதிவிட்டிருந்தார்.
ஆனால் அந்த வீடியோ, தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வியட்நாம் நாட்டின் கேன் தோ நகரில் மழை வெள்ளத்தின்போது எடுக்கப்பட்டது என தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு ஆய்வு செய்து தெரிவித்தது.
தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் கண்டறிந்ததை அடுத்து, தான் வெளியிட்ட பதிவை நீக்கினார் நிர்மல்குமார். அதற்குள் அவரது பதிவை ஏராளமானோர் பகிர்ந்து, அது பலரையும் சென்றடைந்தது.
இந்நிலையில் சமூக வலைதளத்தை கண்காணிக்கும் சென்னை காவல்துறை பிரிவு, சிடிஆர் நிர்மல்குமார் மீது புகார் அளித்தது. புகாரின் அடிப்படையில் அதிமுக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்