டீ குடிக்க நின்ற பேருந்தில் பாய்ந்த மின்சாரம் - தன் உயிரை கொடுத்து மொத்த உயிரையும் காத்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பெண் பக்தர் நடந்தது என்ன முழு விபரம்
டீ குடிக்க நின்ற பேருந்தில் பாய்ந்த மின்சாரம் - தன் உயிரை கொடுத்து மொத்த உயிரையும் காத்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பெண் பக்தர் நடந்தது என்ன முழு விபரம்
திருப்பதூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அனிந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பேருந்தின் மூலம் வந்துகொண்டிருந்தனர்.
அப்பேது ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி பகுதி அருகே டீ அருந்துவதற்காக பேருந்து சாலையோரம் நிறுத்தும் போது சாலையோரம் உள்ள மின் கம்பி பேருந்தின் மேல் கூறை மீது உரசியதாக கூறப்படுகிறது இதன் காரணமாக பேருந்து முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதை அறியாமல் டீ அருந்துவதற்காக பேருந்தில் இருந்து கீழே இறங்கிய அகல்யா(20) என்ற பெண் பேருந்து கம்பியை பிடித்த போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆற்காடு நகர காவல் துறையினர் அகல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காலணி அணியாமல் பேருந்தின் இரும்பு கைப்பிடியைப் பிடித்து இறங்க முயன்ற போது அகல்யா மீது மின்சாரம் பாய்ந்ததாக அவருடன் இருந்த மற்றொரு பெண் சந்தியா கூறினார்.
தொடர்ந்து இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பேருந்தில் இருந்து கீழே இறங்குவதற்காக கம்பியை பிடித்த அகல்யா(20) என்ற இளம் பெண் இதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழப்புக்கு முன் கம்பியில் கைவைக்காதீங்க... என கத்திக்கொண்டே அகல்யா கீழே விழுந்து அனைவரையும் காப்பாற்றி தன் உயிரை தந்துள்ளார்
மேல்மருவத்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக பேருந்தில் பயணம் செய்த போது மின்சாரம் தாக்கி பக்தர் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
Tags: தமிழக செய்திகள்