ரஷ்யாவின் உயர் கட்டிடங்கள் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தும் உக்ரேன் வைரல் வீடியோ
ரஷ்யாவின் உயர் கட்டிடங்கள் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தும் உக்ரேன் வைரல் வீடியோ
இரஷ்யாவின் காசன் பகுதியில் உள்ள உயர் கட்டிடங்கள் மீது தொடர்ந்து ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தும் உக்ரேன்
உலக நாடுகளின் கூட்டமைப்பான நேட்டோவில் உக்ரைன் இணைவதை காரணம் காட்டி உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் போரை தொடங்கியது.
உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷிய ராணுவம் தீவிரப்படுத்தி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத மற்றும் பொருளாதார உதவியுடன் ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு போரிட்டு வருகிறது.
இந்நிலையில், ரஷியாவின் ரில்ஸ்க் நகரில் நேற்று உக்ரைன் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர் என்று குர்ஷ்க் மாகாணத்தின் பொறுப்பு கவர்னர் அலெக்சாண்டர் கின்ஷ்டைன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியதாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1870667264514719967
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ