Breaking News

நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆனது ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதா முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்தார் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் 



இந்தியா முழுவதும் ஒரே நாடு ஒரே தோ்தல் திட்ட அமலுக்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது

இந்த திட்டத்திற்க்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தநிலையில், ‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான இரு மசோதாக்களையும் மக்களவையில் இன்று  மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்

மக்களவை, மாநில சட்டப்பேரவைகள், மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக,  முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது.

இந்தக் குழுவினர் கடந்த மார்ச் மாதம் தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் தாக்கல் செய்தது இந்த அறிக்கையை, மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் ஏற்றுக் கொண்டது. இதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. 

இந்த மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

இந்த மசோதாக்களில் புதிதாக சட்டப்பிரிவு 82(ஏ) இணைக்க முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், சட்டப்பிரிவு 83, சட்டப்பிரிவு 172, சட்டப்பிரிவு 327-களில் திருத்தம் மேற்கொள்ளவும் வழிவகை செய்கிறது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback