தொடர் விடுமுறை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு முழு விவரம்
தொடர் விடுமுறை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு முழு விவரம்
தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்
தாம்பரம் – கன்னியாகுமரி இடையே கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் இருந்து டிச.24 ம் தேதி மற்றும் 31-ம் தேதி ஆகிய 2 நாட்கள் நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரிக்கு பகல் 12.15 மணிக்கு செல்லும்.
அதேபோல் கன்னியாகுமரியில் இருந்து டிச.25 ம் தேதி மற்றும் ஜன.1ம் தேதி ஆகிய 2 நாட்கள் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.20க்கு தாம்பரம் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் தாம்பரம்- செங்கல்பட்டு- மேல்மருவத்தூர்-விழுப்புரம்-விருதாச்சலம்-திருச்சி- திண்டுக்கல்-மதுரை-விருதுநகர்-சாத்தூர்-கோவில்பட்டி- திருநெல்வேலி-வள்ளியூர்-நாகர்கோவில் வழியே கன்னியாகுமரி சென்றடையும்
மதுரை - சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரயில்
மேல்மருவத்தூர் ஸ்பெஷல் ரயில் எண் 12636 கொண்ட மதுரை - சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 19ஆம் தேதி முதல் பிப்ரவரி 11, 2025 வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும்.
Tags: முக்கிய அறிவிப்பு