Breaking News

பட்டபகலில் தனியார் வங்கியில் புகுந்து வங்கி ஊழியரை வெட்டிய நபர் நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர், வங்கி ஊழியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

தி. நகரில் உள்ள பர்க்கிட் சாலையில் எச்.டி.எப்.சி. என்ற தனியார் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இன்று மதியம் வங்கிக்கு வந்த மர்ம நபர் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தினேஷ் என்பவரை அந்த நபர் அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதில் தினேஷிற்க்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே, அங்கிருந்தவர்கள் அந்த மர்ம நபரை மடக்கி பிடித்து, தி.நகர் போலீஸில் ஒப்படைத்தனர்தினேஷை, சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து, ஊழியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பின்பு நடத்தப்பட்ட விசாரனையில் தினேஷ் என்ற ஊழியரை வெட்டியவர் பெயர் சதீஷ் என்பதும் தினேஷும் சதீஷும் 2 ஆண்டுகளுக்கு முன் நந்தனம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளனர் என்வும் ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட சதீஷ், தினேஷ் தான் காரணம் என ஆத்திரம் கொண்டு தினேஷை பழிவாங்குவதற்காக அவர் எங்கு பணியாற்றுகிறார் எனத் தேடி வந்த சதீஷ் உன்னால தாண்டா என் வாழ்க்கை வீணா போச்சுஎன தினேஷை வெட்டியுள்ளார் சதீஷ் என விசாரனையில் தெரியவந்தது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback