மாவு அரைத்தபோது கிரைண்டரில் சிக்கி பரிதாமாக உயிரிழந்த இளைஞர் வைரல் வீடியோ
மாவு அரைத்தபோது கிரைண்டரில் சிக்கி பரிதாமாக உயிரிழந்த இளைஞர் வைரல் வீடியோ
மும்பையின் வொர்லி ஆதர்ஷ் நகரில் உள்ள உணவகத்தில் பணி புரிந்த ஜார்க்கண்டை சேர்ந்த 19 வயதான சூரஜ் நாராயண் யாதவ் என்ற இளைஞர் மாவு அரைக்க கிரைண்டரை இயக்கிய போது திடீரென, சூரஜின் சட்டை கிரைண்டரின் உள்ளே மாட்டிக்கொள்ள சட்டென கிரைண்டருக்குள் இழுக்கப்பட்ட அவர், அடுத்த நொடியே பரிதாபமாக உயிரிழந்தார்
மும்பையின் வொர்லி ஆதர்ஷ் நகரில் உள்ள சைனீஸ் ஹோட்டல் ஒன்றில் சுராஜ் நாராயணன் கிரைண்டரில் மூலப்பொருள்களை தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவரது அணிந்திருந்த சட்டை அந்த கிரைண்டருக்குள் சிக்கிக்கொண்டது.
இதையடுத்து, சற்றும் எதிர்பாராதவிதமாக, சுராஜும் அந்த கிரைண்டருக்குள் சிக்கி கிரைண்டருக்குள் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
கடந்த சனிக்கிழமை நடந்த இந்த சம்பவம் போலீஸாரின் கவனத்திற்கு வந்துள்ள நிலையில், அங்குள்ள சிசிடிவி காட்சியில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து, ஓட்டலின் உரிமையாளர் சச்சின் கோதகர் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1869289316540891339
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் வைரல் வீடியோ