Breaking News

சென்னை துறைமுகத்தில் ரிவர்ஸ் எடுக்கும் போது பிரேக் பிடிக்காமல் கடலில் விழுந்த கார் டிரைவர் மாயம் தேடும் பணி தீவிரம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை துறைமுகத்தில் ரிவர்ஸ் எடுக்கும் போது கடலில் விழுந்த கார் டிரைவர் மாயம் தேடும் பணி தீவிரம் முழு விவரம்

காரில் இருந்த கடற்படை வீரர் காயங்களுடன் உயிர் தப்பினார்.கார் டிரைவர் முகமது சகி கடலில் விழுந்து மாயமானார்.

சென்னை துறைமுகத்தில் கடற்படை வீரர்களை அழைத்து வர நேற்று இரவு கார் சென்றது. அந்த காரை முகமது சகி என்ற டிரைவர் ஓட்டியுள்ளார்.

துறைமுகத்தில் வீரர்களை ஏற்றிக்கொண்டு ரிவர்ஸ் எடுத்தபோது கார் கடலில் விழுந்தது. இதையடுத்தும் காரில் இருந்த கடற்படை வீரர் காயங்களுடன் உயிர் தப்பினார்.ஆனால், கார் டிரைவர் முகமது சகி கடலில் விழுந்து மாயமானார். அவரை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடலில் மூழ்கிய எங்களது மகனின் உடலை மீட்டு தரக் கூறி டிரைவர் முகமது ஷாகியின் உறவினர்கள் துறைமுகம் செல்லும் நுழைவாயிலில் வாகனங்களை நிறுத்தி தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றார்கள்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1869262095549862225

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback