மகாராஷ்டிரா மாநில முதவராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு நாளை மாலை முதலமைச்சராக பதவியேற்கிறார் முழு விவரம்
மகாராஷ்டிரா மாநில முதவராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு நாளை மாலை முதலமைச்சராக பதவியேற்கிறார் முழு விவரம்
மராட்டிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ்! நாளை மாலை ஃபட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்கிறார்
இன்று (புதன்கிழமை) பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.அதில் பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்படி மராட்டிய மாநிலத்தின் அடுத்த முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்க பா.ஜ.க. மத்திய குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து மராட்டியத்தின் முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் நாளை பதவி ஏற்க உள்ளார். விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அவரது முன்னிலையில் கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்பு செய்து வைக்கிறார்.
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநில முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள், பா.ஜனதா முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாரதிய ஜனதா மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்