கஞ்சா வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கைது முழு விவரம்
மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கஞ்சா வழக்கில் கைது!
கஞ்சா வியபாரிகளோடு தொடர்பில் இருந்ததாக நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உட்பட 4 பேரை திருமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னை முகப்பேர் பகுதியில் மெத்தபெட்டமைன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 5 கல்லூரி மாணவர்கள் உள்பட 10 பேரை ஜெ.ஜெ.நகர் காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆந்திரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட போதைப் பொருள்களை சென்னை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
கைதானவர்களின் செல்போன்களை காவல்துறையினர் ஆய்வு செய்ததில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் மற்றும் மூன்று பேர் இவர்களோடு தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்(வயது 26) செயது சாகி, மொஹம்மது ரியாஸ் அலி, பைசல் அஹமது ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் புதன்கிழமை காலை கைது செய்துள்ளனர்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்