தென் கொரியாவில் அவசரநிலை ராணுவச் சட்டம் சில மணி நேரங்களில் முடிவுக்கு வந்தது முழு விவரம் வீடியோ இணைப்பு
தென்கொரியாவில் அவசரநிலை அவசரநிலை ராணுவச் சட்டம் சில மணி நேரங்களில் முடிவுக்கு வந்தது முழு விவரம் வீடியோ இணைப்பு
தென்கொரியாவில் அவசரநிலையை பிரகடனம் செய்தார் அதிபர் யூன்சுக் யேல் மார்சியல் விதியை நடைமுறைப்படுத்துவதாகவும் மார்சியல் விதி கமாண்டராக தென்கொரிய இராணுவ தளபதி பார்க் அன் சூ அறிவிக்கப்பட்டுள்ளார்
தென்கொரிய பாராளுமன்றத்தை கைப்பற்றிய தென்கொரிய சிறப்பு படை வீரர்கள் தென்கொரியா துருப்புகள் பார்லிமெண்ட் மத்திய ஹாலில் நுழைந்தனர்
தென்கொரியாவில் மார்சில் விதி அமலாவது இது நான்காவது முறை ஆகும்..கடைசியாக 44 வருடங்களுக்கு முன் 1980ல் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மார்சியல் விதி கமாண்டராக தென்கொரிய இராணுவ தளபதி பார்க் அன் சூ அறிவிப்பு
தென்கொரியா பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ள நாட்டின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் ஆளும் வலுதுசாரி கட்சி தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில் அந்நாட்டு அதிபர் அவரசகால இராணுவ சட்டத்தை அமல்படுத்தியுள்ளார்
தென் கொரிய நாடாளுமன்றம் இராணுவச் சட்டத்தை திரும்பப் பெற வாக்களித்ததால், அவசரநிலை பிரகடனத்தை திரும்பப் பெற அதிபருக்கு கட்டாயம் ஏற்பட்டுள்ளது நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற ராணுவப் படைகள் திரும்பப் பெறப்பட்டது
தென்கொரியவில் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இரவோடு இரவாக இந்த அறிவிப்பை தொலைக்காட்சியில் தோன்றி தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல் அறிவித்துள்ளார்.
ஜனநாயக நாடான தென்கொரியாவில் கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது
வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் சாசன அமைப்பை காப்பாற்றவே மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தென்கொரிய அதிபர் அறிவித்ததை ஏற்க மறுத்த அந்நாட்டு எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
அதிபரின் உத்தரவை ஏற்க மறுத்து நாடாளுமன்றத்தில் தீர்மனம் கொண்டு வரப்பட்டது
அவசரநிலை ராணுவச் சட்டத்தை அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்த சில மணி நேரத்தில், அந்த பிரகடனத்தை ரத்து செய்து தென் கொரிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.
அப்போது பேசிய நாடாளுமன்ற அவைத் தலைவர் வூ வான்-ஷிக், மக்களுடன் இணைந்து நாட்டின் ஜனநாயகத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பார்கள் என்று சூளுரைத்தார்.
வீடியோ இணைப்பு பார்க்க
https://x.com/adminmedia1/status/1864004801903935692
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ