தூத்துக்குடியில் நடுக்கடலில் நீரை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சும் மேகம் - காணக் கிடைக்காத அற்புத வைரல் வீடியோ!!
தூத்துக்குடியில் நடுக்கடலில் நீரை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சும் மேகம் - காணக் கிடைக்காத அற்புத வைரல் வீடியோ!!
தூத்துக்குடியில் உள்ள தருவைகுளம் பகுதியில் கடல் நீரை உறிஞ்சும் மேகக் கூட்டங்கள் வீடியோவாக பதிவாக்கப்பட்டு வைரலாகி வருகிறது.
கடலில் முகில் நீர்த்தாரை என்றழைக்கப்படும் இயற்கையின் இந்த அரிய நிகழ்வைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றிருந்த போது பூமியில் இருந்து தண்ணீர் வானத்திற்கு உறிஞ்சப்படுவதை வீடியோ பதிவு செய்தனர்.இந்த நிகழ்வு சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடல் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும் கடல் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால் கடலில் நீர் தாரை எனப்படும் இந்த அதிசய நிகழ்வுகள் உருவாகும்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1867982814261723526
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ