ஜாமின் அளித்த மறுநாளே அமைச்சராக பதவி ஏற்றது எப்படி ? செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரிய விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
ஜாமின் அளித்த மறுநாளே அமைச்சராக பதவி ஏற்றது எப்படி ? செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரிய விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
ஜாமின் தீர்ப்பை திரும்ப பெறக் கோரும் மனுவுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
மீண்டும் அமைச்சரானது தொடர்பாக வரும் 13-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ்
செந்தில் பாலாஜி அமைச்சராகயிருப்பதால் சாட்சிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது - உச்சநீதிமன்றம்
ஜாமின் அளித்த மறுநாளே அமைச்சராக பதவி ஏற்றது சாட்சியங்களுக்கு நெருக்கடி- உச்சநீதிமன்றம்
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்கிய தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் - மனுதாரர்
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கில் அவருக்குக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி அடுத்த நாளே அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமின் தீர்ப்பை திரும்ப பெற கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மீண்டும் அமைச்சரானது தொடர்பாக வரும் 13-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி அமைச்சராகயிருப்பதால் சாட்சிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜாமின் அளித்த மறுநாளே அமைச்சராக பதவி ஏற்றது சாட்சியங்களுக்கு நெருக்கடி அளிக்கும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்