Breaking News

அசாம் மாநிலம் முழுவதும் பொது இடங்கள், ஹோட்டல்களில் மாட்டிறைச்சிக்கு தடை முதல்வர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை

அசாம் மாநிலம் முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து, அம்மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா ஷர்மா அறிவிப்பு

"உணவகங்கள், பொது நிகழ்ச்சிகள், பொது இடங்களில் எதிலும் இன்று முதல் மாட்டிறைச்சி பரிமாறக்கூடாது என ஹிமாந்த பிஸ்வா ஷர்மா அறிவிப்பு

அசாம் மாநிலத்தில் உணவகங்கள், பொது நிகழ்ச்சிகள், பொது இடங்களில் மாட்டிறைச்சி சாப்பிட இன்று(4.12.2024) முதல் தடை விதிக்கப்படுவதாக முதல்-மந்திரி ஹிமாந்த பிஸ்வா ஷர்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்-மந்திரி ஹிமாந்த பிஸ்வா ஷர்மா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் 

முன்பு கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள 5 கி.மீ சுற்றளவில் மாட்டிறைச்சிக்கு முன்பு தடை விதிக்கப்பட்டிருந்தது. 

தற்போது நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கட்டுப்பாட்டை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். மாநிலம் முழுவதும் பொது இடங்களில் மாட்டிறைச்சி சாப்பிட இன்று(4.12.2024) முதல் தடை விதிக்கப்படுகிறது.

இந்த கட்டுப்பாடு மாநிலம் முழுவதும் உள்ள உணவக விடுதிகள்,உணவகம் மற்றும் உள்ளூர் கொண்டாட்ட நிகழ்சி உட்பட அனைத்திற்க்கும் பொருந்தும். விதிகளை மீறுபவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு தண்டிக்கப்படுவர்.  இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளோம்.என அவர் கூறியுள்ளார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback