Breaking News

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன முழு விவரம் வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

சட்ட மேதை அம்பேத்கரின் 68ம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே மற்றும் ஓய்வு பெற்ற பெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. விஜய்யுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தேவையில்லாத விவாதங்கள் ஏற்படும் என்பதால் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை. 



இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய தவெக தலைவர் விஜய்: 

அம்பேத்கர் புத்தகம் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் மத்தியில் நானும் இருப்பது பெருமையாக இருக்கிறது. நீ ஏன் பள்ளிக்கு வருகிறாய் ஒரு சமூகமே அவரை தடுத்தது. அதையும் மீறி அம்பேத்கர் பள்ளிக்கூடம் சென்றார். பிறப்பால் நாம் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்யும் அரசியல் சாசன சட்டத்தை கொடுத்தவர் அம்பேத்கர். 

வேங்கைவயல் ஊரில் நடந்ததை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை, ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. சமூக நீதி பேசும் அரசு இவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறது. இதனை அமோதாக்ர் பார்த்தால் தலை குனிந்து போவார். பெண் குழந்தைக்கும், சக மனிதருக்கும் இங்கு பாதுகாப்பு இல்லை. அனைவருக்கு எதிராகவும் குற்றம் நடக்கிறது. மக்களை உண்மையாக நேசிக்கும் நல்ல ஒரு அரசு வேண்டும்.

ஜனநாயகத்தின் ஆணிவேர் நியாயமான தேர்தல். சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தல் நடப்பதாக மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். அதற்கு ஒருமித்த கருத்துடன் தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய வலிமையான கோரிக்கை. 

அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதியை இந்தியாவின் ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்பது என்னுடைய மற்றொரு கோரிக்கை. இதனை நான் மத்திய அரசிடம் முன்வைக்கிறேன்.

இன்றைக்கும் மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது நமக்கு தெரியும். அதை கண்டுகொள்ளாமல் ஓர் அரசு மேலிருந்து நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது. அங்குதான் அப்படி என்றால் இங்கு இருக்கும் அரசு எப்படி இருக்கிறது. சமூக நீதி பேசும் இங்கிருக்கும் அரசு, வேங்கைவயல் பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு நடக்கும் பிரச்சினைகளுக்கு ட்வீட் போடுவது மட்டும அரசியல் அல்ல. சம்பிரதாயத்திற்காக மழைநீரில் நின்று போட்டோ எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மக்களுடன் உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். என்ன செய்வது நாமும் சம்பிரதாயத்துக்கு சில நேரங்களில் அப்படி செய்யவேண்டியுள்ளது.

தமிழக மக்களின் உரிமைக்காக எப்போது துணையாக இருப்பேன். மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாத அரசு, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி உள்ளது. இருமாப்போடு 200 தொகுதியிலும் வென்று விடலாம் என்று சொல்பவர்களுக்கு நான் எச்சரிக்கைவிடுகிறேன். உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள். அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கூட திருமாவளவன் பங்கேற்க முடியாத அளவிற்கு  அழுத்தம் இருப்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும் அவர் மனசு முழுக்க முழுக்க நம்முடன் தான் இருக்கும் என விஜய் பேசினார்.

இந்நிகழ்வில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில்,

காலச் சூழல் காரணமாக திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது மனசாட்சி இங்குதான் உள்ளது. ஒரு பட்டியலினத்தவர் முதல்வராக வரவேண்டும் எனும்போது அதற்காக முதல் குரலாக ஒலித்த குரல் விஜய்யின் குரல். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை உரக்க சொல்வோம். 2 ஆயிரம் கோடி ரூபாய் தொழிலை விட்டுவிட்டு வந்துள்ளார் விஜய். ஆனால், இங்கே சிலர் சினிமாவில் ஒரு நிறுவனத்தை வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

ஒரே நிறுவனத்தால் எப்படி மொத்த திரையுலகையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறது. தமிழகத்தின் ஊழலையும், மதவாதத்தையும் விஜய் எடுத்து பேச வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். வேங்கை வயல் பிரச்சினை இன்றைக்கு வரை தீர்க்க முடியாததற்கு காரணம் என்ன? ஒரு கான்ஸ்டபிள் நினைத்தால் கூட குற்றவாளியை பிடித்துவிடலாம். சாதிதான் இதற்கு முட்டுக்கட்டையாக நிற்கிறது.

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டால் தப்பு என்கிறார்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். அதில் பட்டியலின மக்கள் பங்கேற்க வேண்டும். இங்கே மன்னராட்சிதான் நிலவுகிறது. கேள்வி கேட்டால் உடனே சங்கி என்கிறார்கள். தமிழகத்தில் மன்னராட்சிக்கு இடமில்லை. 2026-ல் மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்படும். 

விஜய் வேங்கைவயல் கிராமத்துக்கு சென்று அந்த மக்களுடன் உரையாட வேண்டும். மக்கள் தமிழகத்தில் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்துவிட்டனர் என்றார். 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/TST_Offcl/status/1865075619857351036

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback